கிழவி

அந்த கிழவியை
பலமுறை பார்த்திருக்கிறேன்
அவளின் கால்கள்
காலத்தை விட வேகமாகவே ஓடும்
அழிந்து வரும் காடுகளில்
மறைந்து கொண்டிருக்கும் சுள்ளிகளை
காலையிலிருந்தே தேடி
கூன் விழுந்த போதும்
கம்பீரமாய் தூக்கி வருவாள்

நானும் கேட்பேன்
ஏன் பாட்டி இந்த வயதில் இது தேவையா?
அவளும் சொல்வாள்
சிவனே என இருக்காததால தான்
சீவனோடு நான் இருக்கன்
படிச்ச உனக்கு நாலு
படியேறவே மூச்சிறைக்குது
உழைச்ச எனக்கு இந்த
வயசிலும் மூச்சிருக்குது
இது அந்த காலத்து கட்டை
ரொம்ப காலம் ஆகும் எரிய பேராண்டி

எத்தனை பெருமிதம் அந்த கிழவிக்கு
வெயில் பட்டா கறுத்துப் போவேனு
குடை பிடிச்சு போற உலகம்
மழை வந்தா சளி பிடிக்குமுன்ன
மருத்துவர் கிட்ட கிடக்கும் உலகம்
இது மழையும் பாக்காம
வெயிலும் பாக்காம
சச்சின் போல நூறடிச்சு கிடக்குது

கம்ப்யூட்டர் உலகம்
இருபதிலேயே இரும்புது
கம்பு தின்ன உடம்பு
இறுமாப்பா நடக்குது

பாட்டி நீ தான் ரியல் பியூட்டி

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (27-Jan-17, 10:00 am)
Tanglish : kizhavi
பார்வை : 416

மேலே