ஜல்லிக்கட்டு

புறமுதுகிட்டான் மகன்...
தகவலறிந்து தம்முயிரை விட துணிந்த
தமிழச்சியின் தமிழ் மண் இது...
பால்குடி மறவா பாலகனை
போர்க்களத்துக்கு அனுப்பிய
தமிழச்சியின் தமிழ் மண் இது...
விழுப்புண்களாலே வீரத்தை பறைசாற்றும் பரம்பரை
நம் பரம்பரை...
விழித்திட்ட தமிழனே...
கதிரவனின் கதிர்களால் கலங்காதவனே....
கொட்டும் பனியிலும்
கொடி பிடிக்க தயங்காதவனே...
உறக்கத்தை துறந்து
உரிமைக்காக போராடியவனே...
நெருங்கி அமர்ந்தாலும்
நெறி தவறாத ஆண்கள்
சுதந்திரமாய் பெண்கள்
இதுவே என் தமிழகம்....
வெளிச்சமின்றி போனாலும்
விளக்கினை ஏந்தி
விலக்கினை தகர்த்திட்ட தமிழனே..
உன்னை வணங்குகிறேன்..!!!!