கம்பீரம்

மோனை தேர்கள் பூட்டி
எதுகை சின்னம் ஏற்றி
அணி என்னும் கவசம் அணிந்து
இலக்கணச் செங்கோல் ஏந்தி
யாப்பு எனும்
சிம்மாசனத்தில் அமர்ந்து
சந்தம் முழங்கிட
இலக்கிய பவனி வரும்
எழுத்துக்களின் சேனை கூறும்
கம்பீரம் என்னவென்று?

எழுதியவர் : செ.ஞானப்பிரகாசம் . (29-Jan-17, 3:05 pm)
பார்வை : 836

மேலே