மறவாதிருக்க

இதுநாளாய் எங்கிருந்தாய்??
இன்றென்னை என்செய்தாய்?
கண்முன்னே மேகங்கள்
கரைந்தொழுகக் காண்கின்றேன்!!!

உன் இதழில் ஈரம் குறைந்ததென,
கங்கையைத் திருட புறப்பட்டேன்!
உன் கண்ணில் தூசு பட்டதென,
காற்றை எரிக்கப் பறக்கின்றேன்!

உன் கால்கள் தரையில் படும்போதெல்லாம்,
பஞ்சுமெத்தை தரிக்கின்றேன்!
உன் கைகள் என்னைத் தீண்டக்கோரி,
யுகம் முழுக்க நோன்பிருந்தேன்!

மனத்தின்முன் மண்டியிட்டேன்,
இதயத்தை இறுக்கிக் கொண்டேன்,
கனவிற்கு இலஞ்சம் தந்தேன்,
உன்னை மறவாதிருக்க வேண்டி!!!

எழுதியவர் : விக்னேஷ் ச (30-Jan-17, 1:46 pm)
பார்வை : 105

மேலே