பாவை விளக்கு

காதல் யாது என்று தெரியாமலே
காதல் காதல் என்று காதலைத்தேடி அலைந்தேன்

அப்போது தான் உனைக்கண்டேன்
உன் கண்களைக் கண்டேன்
அந்த கண்கள் இரண்டில் வீசும்
பேரொளி கண்டேன்
இவைதான் ஏற்றிவைத்த காதல் தீபமோ
என்று மனதில் நினைத்தேன்

மெல்ல மெல்ல நீயும் என்னை அறிந்தாய்
என்னுள் எழுந்த காதல் வேட்கையை
எப்படியோ அறிந்து கொண்டாய்
என் பக்கம் வந்தாய் எனக்கு ஆதரவு தந்தாய்
அன்பு மொழி பேசினாய் , ஒரு தாய்போல்
அன்பு மழையும் பொழிந்தாய்
காதல் என்பது வெறும் வெளி சேட்டைகள் அல்ல
மெய்க் காதலில் பிறப்பதுதான்
பாரம்பரியம், பண்பாடு, குடும்பம்
என்பதை தெள்ளத் தெளிவாய் விளக்கினாய்
என்னைத் தெளியவைத்தாய்
காதலைப் புரியவைத்தாய்
தெளிந்த என் உள்ளம் தந்த
என் காதலை ஏற்று கொண்டாய்
இப்போது என்னவளும் ஆகிவிட்டாய்
என் கண்ணம்மா உன்னை
நான் என்னென்று கூறுவேன்

என்னை ஏத்திவைத்த என்
காதல் தீபம் என்றா இல்லை
பாவை விளக்கு என்றா
நீ என் பாவை விளக்குதான்
இதோ கூறி விட்டேன் கண்ணம்மா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jan-17, 1:37 pm)
Tanglish : paavai vilakku
பார்வை : 56

மேலே