தேவை விஞ்ஞானியல்ல
தேவை விஞ்ஞானியல்ல !!!
தேடுகின்றோம் வேளாண்நிலங்களைத்
தேவையில்லை விஞ்ஞானிகள் !
பாடுகின்றோம் நடவுப்பாட்டு
பட்டறிவே போதுமிங்கே !
நாடுகின்றோம் உழைப்பாளர்களை .
நட்டுவைத்தக் செந்நெல்லுக்காக !
ஓடுகின்றோம் அடிமைகளாய்
ஒழிக்கின்றோம் விவசாயிகளை !
வாடுகின்றோம் சோற்றிற்காக !
வளமையேதும் ஈங்கில்லை !
காடுகளை அழித்ததாலே
கார்முகிலும் ஊடல்கொண்டுக்
கேடுகளைத் தருகின்றான் .
கேட்டதுவே வான்மழையும் !
மாடுகளும் குறைந்ததுவே !
மழலைகளும் நிலம்நோக்கி ...!!!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்