மாறும் காலநிலை

மாறுகின்ற காலநிலை
----- மண்ணுலகின் நிலையன்றோ !
தாறுமாறாய் வீசுகின்றத்
------ தடையில்லாப் புயல்காற்று
வீறுகொண்டே எழுகின்ற
------ விண்ணுலகின் வான்மழையும்
வேறுபாடாய்ச் சுட்டெரிக்கும்
------- வெய்யோனின் சீற்றமும்தான்
தேறுகின்ற செந்நெல்லைத்
------- தேவைக்குக் கிட்டிடாமல்
மாறுகின்ற மனிதர்களின்
------- மனத்தையொத்தப் பருநிலை !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 5:11 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 372

மேலே