காமம்

அடை மழை..

மின்சாரம் துண்டிப்பு..

வீட்டின் எதிரே உள்ள சிறிய கோவிலில் தீபம் சுடர்விட்டு எரிகிறது..

தலையை உலுக்கி மழை நீரை சிதறவிட்டு இருவர் கோவிலினுள் நுழைகின்றனர்..

கடவுளை வணங்க வில்லை..

கோவிலில் யாருமில்லை..

கோவிலை இருவரும் சுற்றிப் பார்க்கின்றனர்..

ஒருவர் நெருங்க..

ஒருவர் விலக..

வருடல் இல்லை..

முத்தம் இல்லை..

கடவுள் சிலையானர்..

தீபங்கள் உஷ்ணத்தை அதிகரித்தன..

ஈருடல் ஓருடல் ஆனது..

அது தொடங்கியது..

அது உச்சம் பெற்றது..

அது சாந்தி அடைந்தது...

தீபம் அணைந்தது..

மழை நின்றது..

மின்சாரம் சீரானது..

சீ போ!! நாயே!!

என்று அந்த இரு நாய்களையும்..

விரட்டிக்கொண்டே வந்தார்..

எங்கிருந்தோ வந்த..

பூசாரி !!!

எழுதியவர் : கணேஷ் (1-Feb-17, 12:41 am)
சேர்த்தது : ganeshmech
Tanglish : kamam
பார்வை : 125

மேலே