எது நீதி

நச்சு பாம்பு தெம்பட்டது
அதை அடித்து மாய்த்து விடவா
இல்லை பிடித்து அதன் போக்கில்
விட்டுவிடவா

பொல்லா கள்ளன் அவன்
கொலை, கொள்ளை, கற்பழிப்பே
அவன் விரும்பி செய்யும் வேலை
துரத்துகையில் பிடிபட்ட இவனை
மாய்த்துவிடலாமா இல்லை
நீதிக்கு முன் நிறுத்திவிடலாமா
விட்டு விட்டால் அவனுக்கு தெரிந்தது
குற்றங்கள் செய்வதொன்றே

இது மாதிரி சமூகத்தை பாதிக்கும்
கேள்விகளுக்கு இந்த சமூகம்
என்ன பதில்கள் எதிர்பார்க்கும்
யார் பதில் தருவார்
இதில் எது நீதி, எது தவறு
யார் அறிவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jan-17, 10:06 pm)
Tanglish : ethu neethi
பார்வை : 98

மேலே