நட்பு

சத்தியம் எது என்றேன்
உள் மனது சொல்லியது
இறைவன்தான் என்று

தியாகி யார் என்றேன்
இதில் ஏது சந்தேகம்
தாய் தான் என்றது மனது

தூய நட்பில்
சத்தியம் தியாகம்
இரண்டும் உண்டென்றேன்
இப்போது புரிகிறதா
நட்பு என்பது என்ன என்று
என்று சொன்னது மனது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jan-17, 9:39 pm)
Tanglish : natpu
பார்வை : 695

மேலே