பனித்துளி
நாள் முழுக்க ரசிக்க ஆசை
அவ்வளவு அழகு
அந்த இலைமேல் உள்ள பனித்துளி
ஏனோ விரோதியானது சூரியன்
எனது ஆசைக்கும்
அந்த பனித்துளிக்கும்
சூரியனும் மத்திய அரசும் ஒன்று தான் போல
வங்கியவே சுரண்டுபவனை விடுத்து
வங்கிக்கடன் கட்ட இயலாதவனை
பிடித்தது போல்
அவ்வளவு பெரிய கடலிருக்க
தாகம் தீர்க்க
இந்த எளிய பனித்துளி தான் கிடைத்ததா?
என் காதலியின்
உதட்டோரம் முளைத்த முகப்பருவை கூட
இப்படி ரசித்து உருகியதில்லை
ஆதலால் தான் என்னவோ
முறித்துக் கொண்டாள் உறவை
சரி விடு
வேறு ஒரு உதடும்
அருகில் ஒரு முகப்பருவும் கிட்டாமலா போகும்?
உடனே கொதிக்காததீர்கள்
காதலின் புனிதம் கெடுத்தேன் என
நான் இப்படி சொல்லும் முன்
பச்சை குழந்தையையே தோற்கடித்திருக்கிறேன்
அழுகையில்
ஆறுதல் ஒன்றுதானே
மாறுதலுக்கு துணை
எதிலோ விட்டுவிட்டேன்
ஆம்
அந்த பனித்துளி
- கி.கவியரசன்