இறந்து போன காதல்...!!!!
அழகிய மாலை பொழுது .. பேருந்து நிறுத்தம்...
என்னோடு நம் காதல் நினைவுகளை
சுமந்து கொண்டு அந்த இருக்கை...!!
வருவோர்... போவோர்.... பலர் இருக்க
தனிமை சோலையாய் மாறிற்றே
சில நொடிகளும்..!!
என் வாழ்க்கையை பிடுங்கி சென்றவள்
மீண்டும் என் முன்னே..!!
உன்னை அடையலாம் கண்டு கொள்ள இத்துனை
நொடிகள் ஆயிற்றே ...! என் செய்வேன்
நான் கண்ட என்னவள் இப்போது
சில மாற்றங்களுடன்..!!
சில நொடிகளில் என் கவலை காற்றில்
அடித்து செல்ல... இன்பம் பற்றி கொண்ட நேரம்
உன் அறைமுகம் கண்டேன்...!!
பேருந்தில் இருந்து நீ இறங்க
உன் அருகில் செல்ல கால்கள் துடிக்க...
முன் வர முயற்சித்த நேரம்..!!
உன் கை பிடித்து வந்த மழலையை
கண்ட பின்னே... கண்டேன் உன்
மங்கள கழுத்தை..!!
சட்டென ஒளிந்து கொண்டேன் உன்
கண்ணில் படாமல்... மறைந்து.
எதையும் காண முடியாமல் என் கண்களை
மறைத்தது என் கண்ணிர் துளி...!!