ஜல்லிகட்டின் எல்லை

துள்ளி வரும் காளைகளை
அள்ளி தழுவும் காளையர்களே
வாடிவாசல் வாடிய போது
வரிந்து எழுந்த இளைஞர்களே

வலைதளத்தின் வாயிலாக
வாடிவாசல் பெருமைகளை
வானுயர புகழ்ந்தோரே
ஜல்லிகட்டு எனும் வார்தை
ஜகம் ஒலிக்க செய்தோரே

வருங்கால ஒலிம்பிக்கில்
வாடிவாசல் அமைந்தாலும்
வியப்பேதும் இதில் இல்லை
அதுதானே இதன் எல்லை

எழுதியவர் : கலியபெருமாள்.கோ (5-Feb-17, 12:03 am)
சேர்த்தது : கலியபெருமாள்
பார்வை : 83

மேலே