சாலையோரம் காத்திருக்கிறேன் நான் உனக்காக 555

உயிரானவளே...
அன்று நீ ஓரப்பார்வை என்மீது
வீசிவிட்டு சென்றாய்...
ஆசைப்பட்டு பார்த்தாயா எதார்த்த
பார்வையா தெரியவில்லையடி எனக்கு...
அன்று முதல்
இன்றுவரை உனக்காக...
இந்த சாலையோர
மரத்தடியில்தான் நிற்கிறேன்...
நீ போகும்போதும்
வரும்போதும்...
தினம் உன்னை ஒருமுறை பார்க்க
வேண்டுமென்றுதான் நிற்கிறேன்...
ஒவ்வொருநாளும் அதே
ஓரப்பார்வைதான்...
என்னை நீ
பார்த்து செல்கிறாய்...
என்றாவது ஒருநாள்
என் அருகில் வந்து...
என் விழிகளை நேருக்கு
நேர் நீ பார்ப்பாய் என்று காத்திருக்கிறேனடி.....