அழகியல்

வகுப்பில்
அனைவரும் அறிவியல்
பாடத்தைக் கவனித்துக்கொண்டிருக்க
நான் மட்டும் அவள் அழகியல்
படத்தைக் கணித்துக்கொண்டிருந்தேன்
இவளைக் காணும்போதுமட்டும்
நான் இறக்காமலேயே
வரியோர்க்குக் காசுபணம்
இரைக்காமலேயே
சொர்கத்திற்குச் சென்றுவந்தேன்
இவளின் வீடு
விழுதுகள் இல்லாத ஆலமரம்
கிளிக்கு பதில் இவள்
இவள் வரைந்த
ஓவியத்தை மை கொண்டு தீட்டாது
நெய் கொண்டு தீட்டினாளோ
என் கண்களில்கூட மணக்கின்றதே..
ஆயிரம் திருக்குறள் இயற்றிய
வள்ளுவர் இயற்ற மறந்த
ஒரு குறள் உன் குரல்
உன் வீட்டுக் கதவை
மூடச்சொல்லாமல்
மதுக்கடையை மூடச்சொல்லி
வீண் போராட்டம்
நடக்கின்றது தமிழகத்தில்
தண்டவாளம் எங்கே
செல்கின்றதோ
அதைத் தொடர்ந்தே ரயில் செல்லும்
அவள் தண்டுப்பாதம் எங்கே
செல்கின்றதோ
அதைத் தொடர்ந்தே நான் செல்கின்றேன்
இந்தோனேசியாவில்
பூகம்பம் வர
இவள் இருப்பதால்
இந்தியாவில்
பூ கம்பளம் விரித்தது