நிழலாக உன்னை தொடர்கிறேனடி நான் 555

விழியானவளே...
உன் பின்னால் தொடர்ந்து வருகிறேன்
நான் உன் நிழலைபோல்...
சில நாட்கள் உன்
கூடவே வருகிறேன்...
உன் ஆடையில் இடம்
பிடித்த சிறுநூல் போல்...
உன் வீடுவரை தொடர முடிந்த
என்னால் முழுவதும் முடியவில்லையடி...
நிழலாகவும் முடியவில்லை
சிறுநூலாகவும் முடியவில்லை...
மீண்டும் மீண்டும் உன்னை தொடர
உன் வீட்டு வாசலில்...
நிழலாக நான்
காத்திருக்கிறேனடி.....