தலைப்பற்றக் கவிதைகள் - மரபு கவிதை

கடல்கரையின் ஓரத்திலே
----- கண்மயங்கி கிடக்கின்ற
விடலைதனின் சோகமது
------ விடைதெரியாக் கேள்விகளே !
கடலலைகள் மோதுகின்ற
------ கணப்பொழுதில் கவிதையாகித்
தடம்புரண்டு வந்தவனோ
------- தண்ணீரும் கதைசொலுமோ !!!


மலைமலையாய்த் துன்பங்கள்
------ மழலையுனை வாட்டியதோ !
அலையடித்து அகதியாக
------ அழைத்துவந்த சிறுமகனோ!
விலைகொடுக்க முடியாத
------- வியன்பொருளே ! கண்திறவாய் !
தலையாய வாழ்விழந்தத்
------ தலைப்பற்றக் கவிதைகளே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-17, 9:07 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 52

மேலே