தவிப்பின் உணர்வு
வாழ்வெல்லாம் தீட்டியும்,
நினைவெல்லாம் மீட்டியும்,
நிஜமெல்லாம் உணர்த்தியும்,
நில்லாதது இது நிலையாய்
எனச் சொல்லியும்,
சொல்லுக்குள் அடங்கா
இவன் மனதே பாவப்பட்டதன்றோ!
பாவமாக பரிதவிக்கிறேன்,
பல வார்த்தைகள் உதிர்த்து,
பத்திரம் சொல்ல அன்று
எவரும் இல்லாததே,
இவனது இன்றய
இயலாமையாய் ஆனது!
தெருவெல்லாம் தேங்கிக் கிடந்து,
தெருமுனையில் காவல் இருந்து,
தேனமுதாய் நான்பெற்ற காதலோ
பிரசவித்தது வேதனை தனை
மாத்திரமே.
ஆயிரம் வினாக்களை
வில்லாகத் தொடுத்து,
விடைபெற்றாய் அன்று நீ.
அழுதழுது ஓய்ந்த கண்கள்
இன்றும் உன்னையல்லால்
இன்னொருத்தியை ஏறிட மறுக்கிறது
துளியேனும்..
போலியானாலும்,
தெவிட்டாத உன் காதல்
மட்டும் மாற மறுக்கிறது
நின்னுள்ளமதில் உணராயோ நீ ..
அஸ்தீர்..