அரசியல்

கொடிபிடித்தச் சிறுவன்நீ
கொள்கையுமே யாதென்றோ !!
பிடிப்பற்ற அரசியலில்
பிசகியுமே பிறந்துவிட்டாய் !!


நொடிக்குநொடி மாறுகின்றார்
நொந்தமனம் வேதனையில் .
மிடிநிறைந்த இவ்வுலகில்
மின்னுகின்றாய் அழகாக !!


படித்தவர்கள் ஆட்சியில்லை
பண்புமில்லை அரசியலில் .
விடியலுமே ஈங்கில்லை
விலகாதோ துயரங்கள் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Feb-17, 3:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 52

மேலே