பிணந்தின்னிக் கழுகுகள் - குறுங்கவிதை
பிணந்தின்னிக் கழுகுகளாய்ப்
----- பிறர்செல்வம் களவாடக்
கணமேதும் நல்லெண்ணம்
----- காசினியில் தொலைத்துவிட்டுப்
பணமோன்றே குறியாகப்
------ பாசத்தை விலைபேசும்
மணமில்லா மலர்போலே
----- மானிடரும் வாழ்கின்றார் !!!!
கழுகுகளின் இரையாகும்
------ கறைபடிந்த பிணங்களுமே !
வழுவாத நெறிமறந்தே
------ வனம்நோக்கிச் செல்கின்றார் .!
முழுவதுமே பொய்சொல்லி
------ முற்றிலுமே மாறுபட்டுத்
தழுவுகின்ற கையின்றித்
------- தரம்புரண்டு வீழ்கின்றார் !!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்