ஏமாளிகள்

ஐந்நூறு ரூபாய்க்கு
அடகு வைத்த ஓட்டு !
பாலாறு தேனாறு கற்பனை
கோளாறாய் முடிந்த கதை !
வேலைவாய்ப்பு அலுவலகம்
வேதனை போக்க டாஸ்மாக்
இரண்டிலுமே கூட்ட நெரிசல் !
இலவசமாய் பெற்ற டிவி
இன்பமாய் கழிக்க இல்லை கரண்ட் !
கட்டனக்கழிப்பறை ஒப்பந்தகாரர்
கறாராய் பறிக்கும் கூடுதல் காசு
கவர்னர் சம்பளத்தை மிஞ்சிய நிலை !
விரைவு பேருந்து பயணம் - உடன்
இலவச இணைப்பு - மூட்டை பூச்சிகள் !
தாவி ஓடும் தூரத்திற்கும்
தாழ்தள சொகுசு பேருந்து
ஆவி போக்கும் அநியாய கட்டணம் !
சுய வாகனம் செலுத்துர்த்தர்க்கும்
பயம் கொள்ள செய்யும்
எரிபொருள் விலை !
உயிர் காக்கும் மருந்துகள்
துயர் துடைக்கா நிலை கொண்டு
காலாவதியாய் கடைகளில்
விற்கப்படும் அற்ப சூழல் !
கோமாளி வித்தை செய்து
கோடீஸ்வரனாகும் ஒருவன்- உன்னை
ஏமாளியாய் வைத்திருக்க
ஏகத்துக்கும் இடம் தருவதேனோ?

எழுதியவர் : "கமுதிக்கவி" முத்து ராஜா (10-Jul-11, 1:52 pm)
பார்வை : 533

மேலே