இளைய நிலா
மாலை நேரப் பொழுதினிலே
மஞ்சள் நிலா வானிலே..
மேகக்கதவை திறந்து கொண்டு
மெல்ல எட்டி பார்க்காதே...
இது நான் இரசித்த ஒன்றுதான்..
ஈரமான நினைவுதான்..
இன்ரேனும் முழுமையாய் இவள் முகம் பார்ப்பேனோ..?
இருட்டு மேக தாவணி நழுவும் நேரம் எதுவோ?
சிலேடை கவிதைகள் பொங்கும்
சினேகிதி நீ பிறந்தால்..
சங்கதி தாளம் போடும் போதே
சிங்காரி நீ மறைந்து போகிறாய்..
வண்ண நிலவென்று சொல்லமாட்டேன்..
வாவென்று ஒருநாளும் அழைக்கமாட்டேன்
வர்ணித்தால் உனக்கு தலைக்கனம்..
விடுமுறை எடுக்கிறாய் ஒருதினம்..
வில்லோடு வா நிலவே
என்றோரு கவிஞன் அழைத்தார்
விண்ணோடு நீ இருக்க
அம்போடு நான் வரவா..?
க நிலவன்