படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

.படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஊன்றுகோல் மட்டுமல்ல
சிலநேரம் ஆயுதம்
கைத்தடி !
ஆடி அடங்கி
அமைதியாக
தியானம் !
சொந்தம் இல்லை
பந்தம் இல்லை
கைத்தடியே துணையாக !
முதுமை
தந்தது
ஞானம் !
வயது தடை இல்லை
சாதிக்கலாம்
எந்த வயதிலும் !