உயிர்பொய் காதல்
உயிரபொய் காதல்
அன்பில் தொடங்கி
ஆணவத்தில் தேங்கி நிற்கும்
இன்பத்தில் திளைத்து
ஈட்டியாய் இதயம் துளைக்கும்
உணர்வுகள் பெருக்கி
ஊழாய் இறுக்கிக் கொல்லும்
எண்ணங்களில் கலந்து
ஏளனங்கள் உமிழ்ந்துச் செல்லும்
ஐயங்கள் பற்றிக்கொள்ளும்
ஒறுத்தல்கள் தொடங்கும்
ஓவியங்கள் சிதைந்து போகும்
ஔடதங்கள் ஒன்றுமே இல்லை
அஃது அழிந்து போகும்
உயிரபொய் காதல்