காதலைப் பக்குவமாக்கு - ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

இதழே சிரிப்பினால் இன்பத்தைத் தந்தே
இதமாய் அருகினில் ஈட்டுவாய் அன்பை
பதமெனக் காதலைப் பக்குவ மாக்கி
விதவிதமாய்ச் செய்வாய் விரைந்து .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Feb-17, 9:50 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 46

மேலே