காதலர் தினம் கவிஞர் இரா இரவி

காதலர் தினம் ! கவிஞர் இரா .இரவி !

காதலர்தினம் மட்டும் நினைப்பது
காதலே அன்று !

வருடத்தில் ஒரு நாள்
நினைப்பதல்ல காதல் !

வாழ்நாள் முழுவதும்
நினைப்பதே காதல் !

காதலித்த நாள் முதலாய்
உயிருள்ளவரை நினைப்பதே
காதல் !

எண்ணம் முழுவதும்
இனிதே நிரம்பி இருப்பதே
காதல் !

அன்பு செலுத்துவதில்
இருவருக்கும் போட்டி நடப்பதே
காதல் !

ஒருவரை ஒருவர் யாரிடமும்
விட்டுக் கொடுக்காததே
காதல் !

இன்பம் துன்பம் இரண்டிலும்
இணைந்தே இருப்பதே
காதல் !

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு
பலியாகாமல் இருப்பதே
காதல் !

ஒருவருக்கு ஒருவர்
அசைக்கமுடியாத நம்பிக்கையே
காதல் !

புற அழகால் வருவதல்ல
அக அழகால் வருவதே
காதல் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Feb-17, 9:22 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 129

மேலே