காதல் பரிசு
மனசுக்குள் மத்தாப்பு மாறிடுமோ நெஞ்சம்
கனவெல்லாம் காதலினால் கண்மயங்கி நிற்கின்றேன் !!!
உனதெழில் கொல்ல உணர்வாயோ கண்ணே !
வனவாசம் வேண்டாமே வாஅருகில் பரிசாக !!
வாராயோ வெண்ணிலவே வந்தருகே நின்றிடுவாய்
தாராயோ நேசத்தைத் தந்திடவாய் காதல்பரிசாய் !!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்