நம் நேசமே காதலின் சுவாசம்
நம் நேசமே காதலின் சுவாசமன்றோ !
காதலின் சங்கமம் தெய்வீகம் அன்றோ !
தெய்வீகக் காதலின் சங்கமம் என்றதோர்
அருமையான தலைப்பினை அளித்திட்ட
காதல் சங்கமம் குழுவிற்கு என் நன்றி !
வலை தளத் தலைப்புடன் என் கவிதையும்
தெய்வீகமாய் காதலுடன் சங்கமம் ஆகட்டும் !
காதல் கொண்டேன் ;கனவினை வளர்த்தேன் ;
மந்திரப் புன்னகையில் மயக்கம் அடைந்தேன் ;
தேன் இதழ் சுவைதனில் எனது
தேகம் குளிர்ந்தது ;காதல் மலர்ந்தது ;
பூ பூக்கும் புது பார்வை உன் பார்வை ;
பூரிப்பு அடைகிறது ; எந்தன் உள்ளம் ,
வில் ,அம்பு , இமை கத்தியால்
வீரம் இழந்தேன் ; தேகம் தளர்ந்தேன் ;
சொல், பேச்சு ,உன் குரல் ஒலியில்
நான் என்னை மறந்தேன் ;கவிஞன் ஆனேன் !
கண் பேசும் கவி வார்த்தைகளில்
கவிதை புனைந்தேன் ; புதிதாய் பிறந்தேன் ;
கவிதை தன்னில் உன் முகம் பார்த்தேன் ;
கை பேசும் கண்ணாடி வளையல்
என்னிடம் பொய் பேசி நிற்பதுவோ!
காயம் அடைந்தேன் ;கண்கள் சிவந்தேன் ;
மலர் வீசும் மணம் பரப்பும்
காற்றும் உந்தன் வாசம் ;கண்ணே !
காதலினால் உயிர் சுவாசம் கொண்டேன் ;
மனம் தேடும் மங்கை நடையினிலே
ஊர்வலம் சென்றேன் ;நான் ஊமையானேன் ;
இமை தேடும் மனதில் என்னுயிர்
காதலியை கண்ணாரக் கண்டேன் ;களிப்புற்றேன்
காதல் கொண்டேன் ; நான் தெய்வீகக் காதலில்
நாம் ஒன்றானோம் ; சங்கமம் ஆனோம் ;
உன் இதழ் சொல்லும் ஒரு வார்த்தை
அது நம் தெய்வீகக் காதலின் சங்கமம் !!!!