காதலித்து கலைத்துப் போன காதலுக்கு
காதலித்து கலைத்து
போன காதலே..!
காமம் என்ற போர்வையில்
எழுந்துள்ளாயா இன்று...??
கதை பேச காதலிப்பவர்களும்
உண்டு,
கதரி அழும் கல்லறைகளும்
இங்கு உண்டு,
என்பதையும் நினைவில்
வைத்துக் கொள்..!
காதல் என்றவர்கள்
எல்லாம் காமம் பிடித்து
ஆடுகின்றனர். கடற்கரையிலும்,
கடைகளிலும்
இன்று.
அன்று ஒருநாள்..!
முளைத்த காதல்
அதுவே நிலைத்த காதல்
உள்ளம் கொள்ளை போகும் வடிவில் முளைத்த காதல்,
இன்று
உடலே ஏலம் போகும்
காதலாய் மாறிவிட்டது
காலம் செய்த மாயமா..?
காதல் தந்த வரமா..?
என்ன என்றும் புரியவில்லை..
எது என்றும் அறியவுமில்லை...
காதலே விழித்துக் கொள்..!
காதல் என்ற போர்வையில்
காமத்தை அடக்கிருக்கும் மிருங்களை அழித்திட..
காதல் காதல்
என்றலைந்தவன் எல்லாம்
காமம் காமம் என
பித்து பிடித்தவனாய் வாழ்கிறான் இன்று....
உண்மை காதலும் உண்டு,
ஊமைக் காதலும்
உண்டு,
ஏமாற்றும் காதலும்
உண்டு,
எந்த காதல் உண்மைக் காதல்
என தெரியாது உயிரினை
மாய்த்துக் கொள்கின்றது
இந்த காதல்
காதலர் தினத்தில்...
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை.