தீர்வோ காணவில்லை

முடிந்தும் முடியவில்லை
--விடிந்தும் விடியவில்லை
தீர்ப்பும் வந்துவிட்டது
--தீர்வோ காணவில்லை !

முதல்வர்களோ இருவர்
--முந்துவதுதான் எவரோ
உரிமைக்கோருவது இருவர்
--உண்மையானவர் எவரோ !

உட்கட்சிப்பூசல் இதுதானோ
--உடைவதற்குவழி இதுவோ !
மறைந்தவரை மறந்தார்களோ
--மறந்தவர்கள் மறுப்பார்களோ !

குற்றவாளிகளோ நால்வர்
--சிக்கியவர்களோ மூவர் !
உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பு
--இறுதியானது என்றானது !

முடிந்தும் முடியவில்லை
--விடிந்தும் விடியவில்லை
தீர்ப்பும் வந்துவிட்டது
--தீர்வோ காணவில்லை !

பழனி குமார்
14.02.2017

எழுதியவர் : பழனி குமார் (14-Feb-17, 9:39 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 166

மேலே