கசக்கிறது நட்பு...

நட்பென்றால் அற்புதம்
நீ எனக்கு
இறைவன் கொடுத்த வரம்

எல்லாம்
உண்மையாக இருந்தது
உனக்குள் சுயநலம்
தலை காட்டும்
வரை....

கை நீட்டி
எல்லோரும்
கேள்வி கேட்கும்
பரிசளித்தாய் .....

வழக்கம் போல
தருகிறாய்
பாசத்தையும்

இதில் எது
நீ - எங்கே
உன் மீது
நான் கொண்ட
நம்பிக்கை?

என் உடுக்கை
இழக்க வைத்து
பின்பு உதவுவதோ
உன் நட்பு ?






எழுதியவர் : மீரா (11-Jul-11, 12:30 am)
சேர்த்தது : meera
பார்வை : 587

மேலே