உடைந்த இதயம்
இருவரும் ஒருவருடன்ஒருவர்
இணைந்தே நடந்தோம் .
சேருமிடம் தெரியாமல்
தேகம் எதையும் தீண்டாமல்
நட்புடன் நடந்தோம் .
ஆனால் இன்றுநாம்
நடந்த இடமெல்லாம்
பாலைவனமாய்க் காட்சியளிக்கிறது .
உன்ஒற்றை சொல்லில்
என்உயிரும் நின்று விட்டது
உடைந்தது என்இதயம். !!!
உன்மணநாள் மடலை
என்னிடம் கொடுத்து
கொன்றுவிட்டாய் என்னை
உயிருடன் என்உயிரே ..!!
நான்செய்த பாவமென்ன ?
நம்காதலை மறந்துவிட்டாய் !
மணப்பெண்ணாய் மாற்றானை
மாலைசூடப் போகிறாய் ..!
அதற்குமுன் நீசூடிய
ஒற்றைரோஜாவை என்
கல்லறைக்கு வைத்து விட்டு போ ..!
அந்தக்கல்லறை கூட
உனக்காக காத்திருக்கும் காதலில்
தோல்வி அடைந்த சோகத்தில் ...!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்