காதல்

என்னவளே என் இனியவளே
அன்று உன்னை நான் கண்டேன்
நீயும் என்னை கண்டாய்
கண்ணும் கண்ணும் கண்டபின்னே
அக்கணமே காதல் கொண்டோம்


இப்படித்தான் அரும்பியது நம் காதல்
இதை நீ அறியாயோ சோலைக்குயிலே
இன்று என்னை கண்ட பின்னும்
பாராமுகமாய் நீ சென்றுவிட்டாய்
காரணம் யாதும் அறியாமல்
வாடி நிற்கின்றேன் பைங்கிளியே
காலம் தாழ்த்தாமல் வந்து நிற்பாய்
என் முன்னே நான் ஏதேனும் உன் மனம்நோக
செய்திருந்தால் செப்பிடுவாய் தைரியமாய்
என் தவற்றை
அர்த்தமில்லா ஊடல்
நம்மிடையே நம் காதலில்
உடைப்பு உண்டுபண்ணிடலாமா
அதனால் கண்மணியே
என்னைக் காணாதது போல்
ஓடி ஒளியாதே மானே

என்று உனைக் கண்டேனோ
என் மனதை, என் உயிரை
உன்னிடம் தந்துவிட்டேன்
உன்னில் நான் என்று
என்னை உன்னுடன் தந்த பின்னே
நீ இன்றி நான் வாழ்வது எப்படி
இனியும் காலம் தாழ்த்தாதே
காலம் நம்மைப் பிரித்திட கூடாது
காலனாய் மாறிவிடக் கூடாது
எங்கிருந்தாலும் ஓடிவா கலைமானே
காத்திருப்பேன் காலமெல்லாம் உனக்காக
வந்து என்னை தழுவிடுவாய் பெண் மயிலே
மழைமேகம் கண்டு ஆடும் ஆண்மயிலாய்
என்னை மாற்றிடுவாய்
உன் வரவில் மகிழ்ந்து ஆனந்த
களி நடனம் புரிந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Feb-17, 5:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 283

மேலே