ஒரு குவளை விஷம்

வந்தது முதல் இன்று வரை
காலம் மெல்ல நகர
அன்பை செலுத்தி வாழ்வில்
ஒளி ஏற்ற துடிக்கும் உள்ளத்தில்
நஞ்சை விதைத்தாயடா..!

காமுகன் கண்ணில் கண்டதெல்லாம்
இடுகாட்டில் இடிகிறதோ...!
இவள் வாழ்வும் திசைமாறி
இருட்டறையில் ஒளிர்கிறதோ...!
கடவுளை பேரம் பேசி
வாங்கும் வியாபார உலகில்
வாங்கிவிட்டான் கற்பையும்..!
விற்றுவிட்டான் பங்கு போட்டு
உடலையும் உணர்வையும்...!

தனிமையும் தள்ளாடுகிறது
அவன் செயலால்..!
வெண்ணிலாவும் இருள்கிறது
உயிர் பிரிவால்..!

சுடர் வெயிலும்
சுடவில்லை இங்கு..!
குளிரிலும் பற்றி எரிகிறது
வேதனையில் உடல் அங்கு..!

இதுவும் கடந்து செல்லும்
என்ற நம்பிக்கையில்
மயக்கும் புன்னகையுடன்
ஒரு குவளை விஷம்
கையில் ஏந்தியும்
உயிர் வாழ்கிறேன்
குடும்ப பசிக்காக...!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (16-Feb-17, 1:04 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : oru kuvalai visham
பார்வை : 247

மேலே