கல்
கல்
நம் வழியில் அது இருந்தால்
நம் காலால் மிதிபடும்
அதன் வழியில் நாம் நடந்தால்
கவனத்தோடு செயல்படுவோம்
அதனுள்ளே பொதிந்திருக்கும்
அதன் சக்தியை நாம் அறியோம்
கற்களிலே பல ரகங்கள் உண்டு
ஒவ்வொன்றுக்கும் ஒரு மகத்துவம் உண்டு
நம் குழந்தைப் பருவத்து
நண்பனவன்
கூழாங்கற்களாய் உருவெடுத்து
நம்முடன் விளையாடுவான்
அகிலத்தைப் படைத்தவன் ஆண்டவன்
அவனை வணங்கும் நாம்
அவனின் இருப்பிடத்தை அறிந்தால்
வியந்து போவோம்
கல்லின் கருவறையிலே இருந்து
வெளிவந்த சிற்பியின் குழந்தையவன்
சிலையாக பிறவியெடுத்து,
ஆலயத்தினுள் புகுந்து
தனக்கென்று ஒரு இடம் அமைத்து
பின் கர்பகிரகத்துக்குள் நுழைந்து
கம்பீரமாக வீற்றிருப்பான் இந்த
புவியை ஆளும் மாயவன்
கல் தெய்வமான கதை இது
தெய்வத்திற்கு அடைக்கலம்
கொடுத்த பெருமை கல்லுக்கு
உண்டு
ஆகவே.....
கல்லிற்கு இளகிய மனம் இல்லையென்று யார் சொன்னது
நாம் குடியிருக்கும் இடத்திலும்
அதற்கு பெறும் பங்கு உண்டு
நம் பாதுகாப்பிற்காக அதை
துன்புறுத்தக் கூடாது
அதை மற்றவர் மீது வீசினால்
வலி ஏற்படுவது என்னவோ
அதற்கும் தான்
எத்தனை பேர் இதை உணர்வீர்
கல்லை மரியாதையோடு
பார்ப்போம்
நம் வாழ்வில் ஒரு அங்கமாக
நினைப்போம்
ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 16.02.17 நேரம் - இரவு 11 மணி