அம்மா அம்மா மீண்டும் வருவாயா
;
;
என் தாயே என் தாயே
என் தவறுணந்தேனே
உன் ஆசை கேட்காமல்
ஊர் சுற்ற சென்றேனே
;
;
வளர்ந்த பின்னும்
தலை கோதிடுவாயே
என்னை குறை சொல்வோரோடு
மோதிடுவாயே ....
என்றும் உன்னை கேட்டதில்லை
உணவருந்த நானே
ஒருநாளும் என்னை கேட்காமல்
இருந்ததில்லை நீயே
;
;தனியே என்னை புலம்பவிட்டு
எங்கே சென்றாயோ
தனிமரமாய் தவிக்கின்றேன்
மீண்டும் தாலாட்ட வருவாயோ ///