என் தம்பிக்கு நான் அனுப்பிய தமிழ் கடிதங்கள்

என் தம்பி

உன்னுடன் பேசத்தான் எனக்கு ஆசை

நீ வைத்திருப்பதையெல்லாம் பறிக்கத்தான் எனக்கு ஆசை

உன் அம்மா உனக்கு தமிழை சொல்லித்தரலாம்

உன் அம்மாவிடம் சொல்

நீ எழுதும் முதல் எழுத்து தமிழாக இருக்க வேண்டும்

நீ தமிழன் என்பதை உன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இரு

உன் அம்மாவிடம் கேட்டு நிறைய தமிழ் புத்தகங்கள் வாங்கச்சொல்
உனக்கு படித்துக்காட்டச் சொல்

நீ இன்னும் வளர்ந்த பிறகு
புத்தக மூட்டையுடன் தினம் ஒரு தமிழ் புத்தகத்தையும் சுமந்சே செல்

உன்னை நீயே தமிழன் என்று சொல்லிக் கொள்

மறவாமல் ழ,ள,ல வை ழலளகரங்களை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்

நீ இன்னும் வளர்ந்த பிறகு
எது வேண்டுமானாலும் படித்து பட்டம் பெறு
அதுனுடனே நான் கல்லாமல் போன என் நமது தமிழ் முற்சங்ககால தமிழ் இலக்கியங்களையும் முழுவதுமாய் கற்றிடு தம்பி தமிழா

நீ இதைச் செய்தல் வேண்டும் தம்பி

நம்தமிழை தமிழ் இலக்கியங்களை முழுமையாய் கற்று அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை உனக்கும் எனக்கு உண்டு
ஆதலால் தான் நான் உன்னிடம் சொல்கிறேன் தம்பி

-விக்னேஷ்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கேட்கும் படி இந்த வரிகளை படித்துக்காட்டுங்கள் என் தம்பிகளுக்கு

-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (18-Feb-17, 8:33 pm)
பார்வை : 527

மேலே