படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



சிறு துளிகள்
நீர் பட்டு
துளிர்க்கும் துளிர்கள் !

விதைத்தால் மட்டும்
போதாது
நீர் ஊற்ற வேண்டும் !

விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
துளிர்த்து மரமாகும் !

நீர்த்துளி
உயிர்த்துளி
செடிகளுக்கு !

சிறு துளிகள்
உதவும்
பெரிய மரமாக !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Feb-17, 4:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 112

மேலே