சேர்த்து வைத்த காதல்

சேர்த்து வைத்த காதல்

இன்று இணையதளம் தான் நிறைய காதலை சேர்த்து வைக்கிறது. அதே இணையதளம் தான் எனக்கும் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தியது.

என் பெயர் ரவி ராஜ். நான் காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன்.
முகநூலில் எனக்கு ஒரு பெண் அறிமுகமானால். அவள் பெயர் பிரியா, நாகர்கோவிலில் வசிக்கிறாள். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.

முதலில் இணையதளத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம் இப்போது தினமும் நாங்கள் கைப்பேசியில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவள் எப்படி இருக்கிறாள் என்று இதுவரை நான் பார்த்ததில்லை. அவளிடம் பேசுவது எனக்கு பிடித்திருந்தது. அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க அவளிடம் புகைப்படத்தை கேட்டேன். அவளும் நான் கேட்ட உடன் அனுப்பினால். அவளின் புகைப்படத்தை பார்த்ததும் என்னுள் காதல் மலர்ந்தது. என் காதலை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்தேன். என் காதலை சேகரித்து வைத்துக்கொண்டேன். சில நாட்களுக்கு பிறகு. அவளை நேரில் பார்க்க விரும்பினேன்.

அவளை நேரில் பார்த்து என் காதலை சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவளிடம் நான் நாகர்கோவிலுக்கு வருகிறேன் உன்னை பார்க்க ஆசைப்படுகிறேன் என்றேன். அவளும் சரி என்று கூறினால். அவளை பார்க்க நாகர்கோவிலுக்கு சென்றேன். பேருந்து நிலையத்தில் அவள் எனக்காக காத்துக்கொண்டு இருந்தால்.

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அவளை நேரில் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் அழகாக இருந்தாள். பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அவள் இருந்தால். அவளை பார்த்ததும் என் இரு கைகளும், அவளின் அழகான கன்னங்களை தாங்கி பிடிக்க ஏங்கிக்கொண்டு இருந்தது. அவளின் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது.

அவளிடம் பேசினேன். அவள் அருகிலுள்ள கோவிலுக்கு என்னை அழைத்து சென்றாள். கோவிலில் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். என் காதலை சொல்ல இதை விட சரியான தருணம் வராது என்று எண்ணி இது நாள் வரை என் மனதினில் சேகரித்து வைத்த காதலை அவளிடம் கூறத்தொடங்கினேன். அவளின் அழகான கண்களை பார்த்து "நான் உன்னை காதலிக்கிறேன், என் காதலை கூறத்தான் இங்கே வந்தேன்" என்று கூறினேன். நான் கூறியதும் அவள் அவள் அமைதியாக இருந்தால். என் காதலை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நான் நாகர்கோவிலிருந்து கிளம்பினேன்.

பல நாட்களாகியும் அவளிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. அவளுக்கு பல முறை குறுஞ்செய்தி அனுப்பினேன் எதற்கும் பதில் வரவில்லை. அவள் என்னை மறந்திருப்பால் என்று நினைத்தேன். திடிரென்று அவளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது அவள் மிகவும் சாதாரணமாக என்னிடம் பேசினால்.

அவள் நாளை காஞ்சிபுரத்திற்கு தன் உறவினர்கள் வீட்டிற்கு வருவதாக கூறினால். என்னை பேருந்து நிலையத்திற்கு வரச் சொன்னால். என் காதலை பற்றி அவளிடம் கேட்டேன் அதற்கு அவள் "அதை பற்றி பேசாதே எனக்கு பிடிக்கவில்லை, நாளை கண்டிப்பாக வந்துவிடு" என்று சொல்லி அழைப்பை துண்டித்தால்.

மறுநாள் நான் பேருந்து நிலையத்திருக்கு சென்றேன். அவள் வந்தால் நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ஏனென்றால் அவள் அவ்வளவு அழகு. அவள் என் கண்களுக்கு தேவதையாகவே தெரிந்தால். எல்லாருக்கும் தான் காதலிக்கும் பெண் தேவதை தான்.

அவள் வந்ததும் சிறிது நேரம் பேசினோம். அதன் பிறகு அவள் கிளம்புவதாக கூறினால். அதற்கு நான் "உன் உறவினர் வீடு எங்கே இருக்கிறது என்று சொல் நான் உன்னை விட்டுவிடுகிறேன்" என்று கூறினேன்.

அதற்கு அவள் "உறவினர் வீடா? இங்கேயா? இங்கு எனக்கு உறவினரே கிடையாது. உன்னை பார்க்க தான் இங்கே வந்தேன். உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை உன்னிடம் என் காதலை சொல்ல தான் இங்கே வந்தேன்" என்றால். அதை கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டேன். அன்று என்னையும் அவளையும் காதல் சேர்த்து வைத்தது.

எழுதியவர் : சரவணன் (22-Feb-17, 6:24 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 810

மேலே