தொப்புள் தம்மக்கா

ஏண்டப்பா முனியாண்டி உன்னோட

மனைவிக்கு மொதல் பிரவத்திலயே

ரட்டைக் கொழந்தைங்க

பொறந்திருக்கறாங்க. ஆண்

கொழந்தையும் பெண்

கொழந்தையும்

பொறந்திருக்கறாங்க. நீ ரொம்ப

அதிசிட்டக்காரண்டா. சரி ,

கொழந்தைகளுக்கு என்ன

பேருங்கள வைக்கிறதுன்னு நீயும்

பொன்மணியும் முடிவு

பண்ணீட்டீங்களா?
■◆
நா பொன்மணிகிட்ட கேட்டம்மா .

"மாமா தற்காலத் தமிழர்கள்

வழக்கப்படி நீங்களே நம்மை

கொழந்தைங்களுக்கு உங்களுக்குப்

பிடிச்ச இந்திப் பேருங்களா

வச்சிருங்க"ன்னு சொல்லிட்டா.

நானும் படிக்காதவன்; ,பொன்மணி

ரண்டாம் வகுப்புத்தாம்

படிச்சவ.யாருகிட்டயாவது போயி

கொழந்தைங்களுகளுக்கு பேரு

வைக்க ரண்டு இந்திப் பேருங்களச்

சொல்லுங்கன்னு கேட்டா

எனக்குதாங் கேவலம்.
■◆
ஆமாண்டா முனியாண்டி,

இப்பெல்லாம் சனங்க

பிள்ளைங்களுக்கு இந்திப்

பேருங்களத்தான் வைக்கிறாங்க.

ஒரு தெருவுக்கு ரண்டு பிள்ளைங்க

பேரு சுவ்வாதி, சுவ்வேதா,

அய்ச்சுவரியா, கவ்வுசல்லியா,


பிரியா. நீ யாரும் வைக்காத,


உனக்குப் பிடிச்ச பேருங்கள எஞ்

செல்லப் பேரனுக்கும் பேத்திக்கும்

வச்சிடுடா மகனே.
◆■
டிவி வெளம்பரங்கள்ல அடிக்கடி

டப்புள் தமக்கா-ன்னு

சொல்லறாங்க.தமக்கா-ங்கறது

பெண் கொழந்த பேரு போல தெரிது.

அந்தப் பேர பாப்பாவுக்கு

வச்சிடலாம். அந்த டப்புள் -ங்கற பேர

பையனுக்கு வச்சிடலாம்.
■◆
தமக்காவா, தம்மக்கவா?

கன்னடக்கார போம்பளைங்க

பேருதான் தம்மக்கா, பொம்மக்கா-

ன்னு இருக்கும். பையன் டப்புளா

தொப்புளா. நம்ம பக்கத்தூர்லகூட

தொப்பளான் கவுண்டர்னு நம்ம

பங்காளி ஒருத்தரு இருந்தாரு.
■◆
பையம் பேரு டப்புள்மா, தொப்புள்

இல்ல. பாப்பா பேரு தமக்கா-ம்மா.

தம்மக்கா இல்லம்மா. என்னோட

மச்சனங் கொழந்த பேரு

என்னான்னு கேட்டியாம்மா.
■◆
உம். எதோ நீச்சாவோ,

நிச்சாவநிச்சாவோ -ன்னு

சொன்னாண்டா உம் மச்சனன்.
■◆
சரி நிசா -ங்கற அவனோட

போண்ணு பேருக்கு என்ன

அர்த்தம்னு விசாரிச்சேன். நிசா

(நிஷா) -ன்னா இரவு -ன்னு

அர்த்தமாம்.
■●★
ஒரு பெண் கொழந்தைக்குப் போயி

இரவு-ங்கற அர்த்தம் உள்ள பேர

வைக்கலாமா. இந்திப் பேரெல்லாம்

அப்பிடித்தான் இருக்கும்மா. நாம

எதுக்கு அதப்பத்தியெல்லாம்

கவலப்படணும்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

எழுதியவர் : மலர் (23-Feb-17, 1:37 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 286

மேலே