கலங்கும் நெஞ்சம் - குறுங்கவிதை
கண்ணீரும் கதைசொல்லுமா
கலங்குகிறது நெஞ்சமே !
எங்கேதான் போனாயோ !
எத்திசையும் நீயேதான் !
மனம்சேர மனமில்லையா !
மறப்பதுதான் உன்கொள்கையா !
என்காதல் கைகூடுமா !
எனைவிட்டு விலகியும்தான்
போய்விடுமா அன்பேசொல் !
நீயின்றி நானுதான்
நீண்டிடுமா என்பயணம்
திண்டாடும் என்னிதயம் !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்