வெயில் இரவுகள்

சிறு சிறு சில சிறைகள் வாசம்,
குறு குறு உன் கண்ணால் தந்தாய், விறு விறு என வளரும் அழகில்,
மறு மறு பிறவிகள் தந்தாயே...!

செம்பருத்திப் பூ அழகா,
சிவக்கின்ற முகம் அழகா,
பனி இறங்கும் இரவழகா,
காதல் பினி ஊட்டும் குரல் அழகா,
ஆகாய நிலவழகா,
அடைத்து வைத்த இடை அழகா, ஐம்புலன்கள் என்னைக் கேட்கவில்லை,
அற நெறிகள் அதை ஏற்கவில்லை, துயில் துறக்க செய்ததேனோ, வெயில் இரவுகள் தந்ததேனோ...

நெடுஞ்சாலை பயணங்கள் எங்கே, என் ஈருந்தின் வாய்ப்புகள் எங்கே, முகம் நனைக்கும் முத்தங்கள் எங்கே, செல்லக் குறும்புகள் சத்தங்கள் எங்கே,
திகட்டாத காதல் எங்கே,
அளவான சிறு காமம் எங்கே,
மரண வலி உணர்ந்ததில்லை,
நீ எனக்கில்லையெனில் அவ்வலி ஏற்க மறுப்பதில்லை,
வரமான வண்ணங்களாய் வந்ததேனோ,
அனுதினமும் உன் எண்ணங்கள் தந்ததேனோ...!

எழுதியவர் : பாலகுமார் (23-Feb-17, 5:17 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : veyil iravugal
பார்வை : 96

மேலே