காதலால்

உண்மை சொல்ல தயக்கங்கள்
பொய் சொல்ல கூச்சமில்லை
திருட்டு பார்வையில்
அவள் எதையோ திருடினாள்
நானும் திருடனானேன்
அவள் முன் எலியானேன்
கோழை நான்
அவளுக்காக மற்றவர் முன் புலியாக சீறினேன்
என்னை மறந்து நடித்தேன்
கோமாளியாக சிரித்தேன்
குழந்தையாக அழுதேன்
குரங்காக குதித்தேன்
எதையும் செய்ய துணிந்தேன்
அவள் சிரிக்க அவளுக்காக
காதலால் தியாகியா........சாதனையா
மலையாவேன்
கடலாவேன்
அலையாவேன்
மழையாவேன்
ஒளியாவேன்
ஒலியாவேன்
மொழியாவன்
வானாவேன்
காற்றாவேன். +..........+.........

எழுதியவர் : RajeswariSKumar (23-Feb-17, 6:25 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : kaathalaal
பார்வை : 259

மேலே