இன்றைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
இன்றைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
கூவத்தூரில் கூடி மகிழ்ந்து
கும்மாள ஆட்டம் போட்டு
சுயமரியாதையை அடகு வைத்து
பணத்திற்கு அடிமையாகி
பயத்திற்கு அடிபணிந்து
அறிவை அறவே அழித்து
ஆட்டு மந்தையாய் ஒன்று கூடி
போகின்ற பாதையை தானும் மறந்து
அரசியலை சாக்கடையாக்கி
அந்த சாயத்தை தன்மீதே பூசி
அதுவே அழகு என்றும்
அந்த வாசனையே சிறந்ததென்றும்
மனசாட்சியை தூங்கவிட்டு
தன் நிலையை அறிய மறுத்து
இந்த கபட வாழ்வே நிரந்தரமென்று
உள்ளுக்குள் மனமகிழ்ந்து
பதவியை தக்கவைக்க
எதையும் செய்யத் துணிந்து
ஓட்டளித்த மக்களின்
ஒட்டு மொத்த கோபத்திற்கு
காரணமாய் திகழும்
சில பல சட்ட மன்ற உறுப்பினர்களே
ஓட்டுரிமையின் வீரியத்தை
நீங்கள் உணரவில்லை (தவறு)
நாங்கள் உங்களுக்கு உணர்த்தவில்லை
அதன் பலனை நாங்கள் அனுபவிக்கின்றோம்
அதன் பயனை நீங்கள்
உங்களுக்கு சாதகமாய் கருதுகின்றீர்
தமிழகத்தை தலைகுனிய வைத்த
பெருமை உங்களையே சாரும்
எங்களிடம் நீங்களும் ஒருநாள்
வருவீர்
வெட்கத்தை விட்டு கை கூப்பி நிற்பீர்
காலிலே விழுவீர்
கோட்டைக்குள் நுழைய துடியாய் துடிப்பீர்
சம்பவங்கள் மறந்து போகும்
ரணமான காயங்கள் ஆழமாய் மனதில் பதிந்து போகும்
மாணவ சமுதாயம் மீண்டும்
ஒன்று கூட நீங்கள் வழிவகுத்து
விட்டீர்
உங்களின் ஆட்டம் இன்றோடு முடிந்தது
உங்கள் புதை குழியை நீங்களே
தோண்டி விட்டீர்
மக்களின் சாபம் மகேசனின் சாபம்
மலரப்போகும் தமிழகம்
அமோகமாக இருக்கும்
தமிழக மக்களின் நலம் விரும்பும்
ஒரு தமிழன்
தேதி - 19.02.17 நேரம் - மதியம் 12.45 மணி