கரோலினாவில் ஒரு கார்காலம் -The 10th anniversary trip by CIT CTans

CIT கோயம்புத்தூர் , வருடம் 2001 :



பாரதிராஜா படத்தில் வரும் தேவதைகள் லா லா பாட , காதில் மணியோசை ஒலிக்க, அங்கு

இருந்த பல்ப்புகள் எல்லாம் பிரகாசமாய் எரிய,



நிற்க ! இது ஒரு காதல் கதை இல்லை அதையும் தாண்டி புனிதமானது .



யார் செய்த பாவமோ தெரியவில்லை அந்த வருடம் "BSC CT batch " - படித்த(சென்ற ? ) எங்களுள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நட்பு உருவாக ஆரம்பித்தது .



தொடர்ந்து செல்லும் முன் இரண்டு முக்கியமான சொற்களை அறிய வேண்டியது அவசியம்



பொங்கல் - வெட்டியாக அமர்ந்து ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பையன்கள் அல்லது பெண்கள் மட்டும் பேசுவது அதாவது கடலைக்கு எதிர்பதம் .

வாக்-துரு - பொங்கல் போட்டபடி தெருத் தெருவாக சுற்றுவது



USA Iowa to Chicago interstate I-80 East வருடம் 2011 :

வைத்த அரியர்சுகளும், அனைவரது காமெடி காதல்களும் , அழகுசுந்தரி மேடமும் , கடலைகளும் , பொங்கல்களும் , வாக்-துருக்களும் , ஒரு புற்றைக் கட்டிக்கொண்டு நான் தனியாகவே திரிந்து கொண்டிருந்ததும் , CT கடைசி தினத்தில் ஜெகநாத நகர் மூழ்கும் வண்ணம் குமறிக் குமறி அழுததும் நினைவு வர சிகாகோ நோக்கி சென்றுகொண்டிருந்தேன்



எங்களின் பத்தாவது வருட நட்பை outernbanks - North Carolina வில் கொண்டாடுவதற்காக .



எங்களுக்குள் விதித்துக்கொண்ட முக்கிய கட்டுப்பாடு , இந்த பயணத்தில் பெண்களைப் பற்றி பேசக்கூடாது .



அதனால்தானோ என்னமோ ஆரம்பமே நல்லபடியாக இருந்தது - சிகாகோ மிட்வே விமான நிலையத்தில் இருந்து நானும் ஜெகாவும் அபிக்கு கூப்பிட்டோம்



மாமா "tell me the good news "

its a good news abi, we miss the flight

F*** you mama that's not the good news

ya i guess its not



நாங்கள் போட்ட அனைத்து திட்டங்களும் தவிடு பொடியாக முதல் நாள் அனைவரும் ( குட்டி, அனுப் - நியூயார்க் , பிரதீப்(என்னுடைய "நன்பேண்டா !") , கேட்டி - பாஸ்டன் , நான் , ஜெகா - சிகாகோ , யொவா ,அபி - ரிச்மன்ட்) outerbanks போய் சேர மட்டும்தான் முடிந்தது .



வெகு நேரம் ஆகி விட்டதால் பொங்கலை போடலாம் என்று முடிவு செய்தோம் . நாங்கள் "environment set-up " செய்ய வழக்கம் போல கேட்டி சமைக்க ஆரம்பித்தான் , கூடவே குட்டியும் .



பொங்கல் பெண்களை பற்றி பேசக்கூடாது என்பதால் ,அரசியல் , பொருளாதாரம் , தேர்தல் ,பின்லேடன் , தமிழ் வழிக்கல்வி என சுற்றி சுற்றி வந்தது



environment set-up கொஞ்சம் அதிகம் ஆனதின் விளைவு



இந்திய அரசியல் அடிப்படையை மாற்றக்கூடிய யோசனை ஒன்றை சொல்ல முற்பட்ட கேட்டி "நான் என்ன சொல்றேனா" என்று ஆரம்பிக்க



இவ்வளவு பெரிய மாற்றத்தை தாங்க முடியாத ஜெகா தூங்க அரம்பித்தான்



அனுப் திடிரென்று திருக்குறள் சொல்ல ஆரம்பித்தான் , அது தவறு என்று நாங்கள் சொல்ல தமிழுக்கும் , திருக்குறளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற குண்டை தூக்கிப் போட்டான் .நல்ல வேளை திருவள்ளுவர் அருகில் இல்லை ..



அபி எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் சிக்கன் சாப்பிட ஆரம்பித்தான் .



என்ன செய்வது என்று தெரியாத நாங்கள் environment செட் செய்ய ஆரம்பித்தோம் .



ஒரு பத்து தடவை "நான் என்ன சொல்றேனா" என்று சொன்ன கேட்டி பின் அவனும் environment செட் செய்தான் .



இரண்டாம் நாள் :



வெளியே சென்ற நாங்கள் கடலை பார்த்ததும் மனசு பாதிக்க அருகில் உட்கார்ந்து விட்டோம் . இதில் என்னடா மனசு பாதித்தது என்று பிரதீப் கேட்க " நண்பர்களுடன் வெட்டியாக உட்கார்ந்து கடலை பார்ப்பதை விட என்ன மனசை பாதிக்க முடியும் என்று பதில் சொல்ல அவன் காறித்துப்பிய சத்தம் அலை ஓசை தாண்டியும் கேட்டது



குட்டியும் நானும் வாக்-துரு போட , மனசை அதிகம் பாதிக்க விட்டதின் விளைவு ocracoke தீவுக்கு செல்கையில் அங்கே எங்களை தவிர எதுவும் இல்லை .



சரி பொங்கலை போடலாம் என்று நாங்கள் முடிவெடுக்க , பிரதீப் பரிதாபமாக சொன்னான் டேய் வந்ததில் இருந்து நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்



மூன்றாம் நாள்:



விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதர்கள் நினைவிடத்துக்கு சென்றோம் . அவர்கள் பற்றிய படத்தை பார்த்து வெளியே வந்ததும் மனசு கடுமையாக பாதித்ததால்



ஜெகாவும் , அபியும் "இனி நாம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று வருத்தப்பட ஆரம்பித்தார்கள் "



அனுப்" ம் , கேட்டியும் படம் பார்த்ததில் களைப்புற்று கண்ணீரோடு நடக்க ஆரம்பித்தார்கள் .



குட்டிதான் ஓடி ஓடி இரு சகோதர்களின் சிலைகளுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் ( அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் கல்யாணம் செய்து கொண்டிருப்பான் போல)



அதற்கு பிறகு உருப்படியான ஒரே விசயமாக "parasailing " செய்தோம் .



கடைசி நாள் :



"work from home" என்று சொல்லிக் கொண்டிருந்த நால்வர் கீழ்க்கண்டவற்றை செய்ய ஆரம்பித்தார்கள்



அலாரம் வைத்து எழுந்த பிரதீப் , லேப்டாப்பை மிகவும் பயபக்தியுடன் திறந்து "As i am suffering from fever " என்று மெயில் அனுப்ப ஆரம்பித்தான் .

அனுப் இந்தியாவில் இருந்து அழைப்பு வந்ததும் மிகப்பயங்கிற இருமலுக்கிடையில் சிவாஜி தோற்கும் வண்ணம் பேச அரம்பித்தான்

இதனைப் பார்த்து கொண்டிருந்த அபிக்கு திடீரென்று பல் வலி வந்தது , அனைவரும் அசரும் வண்ணம் கைபேசியில் பல்வலி என்று உயரதிகாரியிடம் சைகை

மொழியில்(?) விளக்க அரம்பித்தான் .



இத்தனை நடந்தும் கேட்டி மனக்கட்டுப்பாடுடன் வேலை செய்ய அரம்பித்தான் ,



ஜெகா நிறைய யோசித்து , டீ போடுகிறேன் என்று சொல்லி காபி போட்டு கொடுத்தான் .



ஜெகாவின் காபியில் உற்சாகமான அனுப் , குட்டி இருவரும் நீ SPB ,நான் யேசுதாஸ் என்று சொல்லி மாறி மாறி பாட ஆரம்பித்தார்கள் (இரண்டு வரிகளுக்கு மேல் எந்தப் பாட்டும் தெரியாத போதும் .)



எனக்கு தெளிவாக ஒன்று புரிந்தது , இந்த நாளும் வெட்டியாகத்தான் கழியப் போகிறது



மாலை , நிறைய பிரியாவிடைகளுடன் மாற்றி மாற்றி கட்டிபிடித்துக்கொண்டு (பிரிய மனசே இல்லை மச்சான் , இன்னொரு நாள் லீவ் போடுவோமா? ) அவரவர் ஊருக்கு விமானம் பிடித்தோம் .



இருந்ததும் மனதில் திருப்தி இல்லை .



திடீரென்று ஜெகா அரம்பித்தான்



மாமா " still she is hot among us "



யாருடா ?



மாமா தெரியுமா ,உன்னை மாதிரி அவளும் புத்தகங்கள் நிறைய படிப்பாள்



விடு ஜெகா என்ன இருந்தாலும் அவள்தான் எனக்கு ஆங்கில புத்தகங்களை அறிமுகப்படுத்தினாள்



ஆமாம் மாமா அவள் "attitude " அங்க இருக்கு என்று மேல கைகாட்டினான் .



விமானம் முழுதும் தேடிப் பார்த்தும் எனக்கு அவள் "attitude " தெரியவில்லை , இருப்பினும் அதுவரை இல்லாத ஒரு திருப்தி .



எத்தனை வருடங்கள் அனாலும் , எத்தனை ஆயிரம் முறை சந்தித்தாலும் , கல்லூரி நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் , அவர்கள் வகுப்பு பெண்களைப் பற்றி பேசாமல் இருந்தால் கருட புராணத்தின் படி தண்டிக்கப்படுவார்கள் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருகிறார்கள் ?



- பாவி

எழுதியவர் : பாவி (24-Feb-17, 2:59 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 234

மேலே