கண்மணிகளுக்கு
விழிப்புணர்வில் சில வரிகள்
அறிவிற்கும் புலப்படாத
அர்த்தமற்ற விடயங்களை
புத்தியில் ஏற்றுவர் -மூடர்
நம்பிவிடாதே ...
அனுமானங்களை விதைத்து,
நம்பிக்கையை அறுவடை செய்து,
ஏமாற்றங்களை பரிசளிப்பர்
வெம்பிவிடாதே ...
"அறிவெனப் படுவது பேதையர் சொல் நோற்றல் "
சொல்வது கலித்தொகை ...
பண்பான பெரியோர் சொல்
ஏற்பது அறிவு ..இது பொருள் ..
"ஆற்றுதலென்பது ஒன்றலர்ந்தவர்க் ஈதல்"
சரியான வறியவர் என்ற மட்டில்
பொருள் கொடுப்போம் ....இது பொருள்..
இக்காட்சிகளிலும் தெளிந்தனம்
ஆதலின்
மாண்பில் பெரியோரை
வியப்புறப் பார்ப்பதும்,
சிறியோர் என்றால்
சிறுமை நினைத்தலும் விடுத்து
மாட்சிமை கொண்ட
பெரிய குறிக்கோள்
நோக்கிய நம் பயணம்
நல்லாற்றுப் படும் நெறிதனிலே
தொடர்வ தென்றால்
வாழ்வும் இனியதன்றோ !.