கருகுதம்மா என் தலைமுறையே

நாற்றங்கன்று நட்டு வச்சு நாலு வாரமா காத்திருக்கேன்
வெட்டி வச்ச கிணறுமிங்கே தூர்வாரி போச்சுதடா
வாய்காலு வரப்பு வெட்டி புழுதி நிரம்பி கிடக்குதடி
குளமெல்லாம் நீர் நிரம்ப தூர்வாரி போட்டேமே
கரை புரண்ட நதியுமிங்கே வரண்டு தானே கிடக்குதடா
பொதுவான நதிக்கு இங்கே நாட்டாண்மை நடக்குதடா
மனிதனுக்கோ மனமில்லை தண்ணீரு தந்திடவே
கடவுளுக்குமா மனமில்லை மழை நீர தந்திடவே
நான் பெற்ற பிள்ளைகளை நெற்கதிரே நீ வளர்த்த பசியில்லாம
நான் வளர்க்க முடியாமா கருகுதமா உன் நாற்ற கன்றம்மா
அரசுக்கு தான் கேக்கலயே நான் கதறும் கூக்குரலே
அடுத்த தலை முறையே நீங்களாதும் காப்பீரோ எங்களயே!

குமா கருவாடு

எழுதியவர் : குமா கருவாடு (23-Feb-17, 11:07 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 157

மேலே