வானவில் தேவதை
வானவில் தேவதை.........
கண் எதிரே தொலைவினில்
சில நொடிகள் விழிகளில் தோன்றி
மறுகணமே மாயமாய் மாய்ந்தாய்
தேடினேன்.... தேடினேன்....
பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
தேடினேன்.......தேடினேன்....
பறக்கும் பட்டாம்பூச்சி கூட்டத்தில்
அவள் நிறம் இல்லையே
எந்தன் கனவிலும் தொல்லையே
காத்திருந்தேன் காத்திருக்கிறேன்
காகிதத்தில் வரைந்தே அவளை
வளைந்து குனிந்து இருகரம் நீட்டி
அழைப்பதாக நினைத்தே என்னை
மனதில் நினைக்கிறேன்
காண துடிக்கிறேன்
குழந்தையாய் அழுது
ஏங்கி தவிக்கிறேன்
ஒருமுறை காணவா...
காதலின் தரிசனம்...