காதல் காத்திரு 3
அதிர்ச்சியில் உறைந்த சினி...
சினி: என்னடி சொல்ற.. அண்ணனயே கொல பண்ணானா.. ஏன்?
அஞ்சலி : ஆமா.... அவன்தான் .... அவன் சித்துவயே கொலை பண்ணான் எனக்காக...
திடீரென ஒரு கார் மருத்துவமனை வாயிலில் வந்து நிற்கிறது. நாலு பேர் வேக வேகமாக வந்து அஞ்சலியை தாக்குகின்றனர். கேமரா மேன் அண்ணாவ கீழ தள்ளிட்டு அஞ்சலிய கடத்திட்டு போயிடுறாங்க...
சினி: டேய் அவள விடுங்கடா..டேய்...
சில மணி நேரத்துக்கு பிறகு.....
அஞ்சலி: டேய் என்ன ஏன்டா கடத்தி வச்சிருக்கீங்க... விடுங்கடா..
ஒருவன்: ஏய் வாய மூடு.. சத்தம் போடாம கெட
அஞ்சலி: உங்களுக்கு பொன்னுங்கன்னா எளக்காரமா போச்சாடா.. நாங்க நினச்சா என்ன வேணா பண்ணுவோம்டா.. கைய கட்டிப்போட்டு பொட்டத்தனமா நாலு பேரு சுத்தி நிக்கீங்களேடா
இன்னொருவன்: மச்சி.. இவளுக்கு நாம யாருனு காமிக்கணுமாம் டா.. காமிச்சிடலாமா?
அஞ்சலி: இன்னும் எத்தன நாளக்கிதான்டா எங்கள இப்படி அடக்கிவச்ச பேசுவீங்க... ஆணாதிக்க உலகத்தில பொறந்து ஒவ்வொரு பொண்ணும் இப்டி கொடுமய அனுபவிக்குறதவிட செத்து தொலஞ்சிரலாம்டா..
ஒருவன்: அய்யய்யே... இன்னாபா இந்த பொண்ணு ரொம்ப பேசுது.. வாய கட்டிப் போடு
அஞ்சலி: மிஞ்சி மிஞ்சி போனா அதுமட்டும்தான் செய்ய முடியும் உங்களால..
இன்னொருவன்: அடிங்க (பளார் ஒன்று வைக்கிறான் கண்ணத்தில்) நானும் பாத்திட்டே இருக்கேன்
மயங்கி விழுந்துவிடுகிறாள் அஞ்சலி
சில நிமிட நேரங்களுக்குப் பிறகு.....
சினி காவல் நிலையம் விரைகிறாள்..
சினி: சார்.. என் பிரண்ட் அ யாரோ கடத்திட்டாங்க..
போலீஸ்: பதற்றப்படாத வா வந்து உக்காரு...நிதானமா சொல்லு
சினி: என்ன சார்.. நானே ப்ரெண்ட்ட கடத்திட்டாங்கன்னு இருக்கேன்.. நீங்க கூலா பேசுறீங்க..
போலீஸ்: அய்யே.. பேஜாரா போச்சிம்மா உன்னோட.. எப்பா ரைட்டரு இந்த பொண்ணுக்கிட்ட கம்ப்ளைன்ட் எழுதி வாங்கிக்கோ..
சினி: சார் இல்ல சார்.. ப்ளீஸ் சார்... கொஞ்சம் வேகமா ஆக்ஷன் எடுங்க சார்.. ப்ளீஸ்
போலீஸ்: சரிமா. உன் ப்ரெண்ட கடத்துனவங்கள யாராயாச்சும் அடையாளம் தெரியுமா?
சினி: எல்லாம் அந்த குப்பத்து ரௌடிங்களாத்தான் இருக்கும்.. அக்லியா அழுக்கழுக்கா டிரெஸ் போட்டுனு இருந்தாங்க
ஏட்டு; இன்னம்மா... வாயி ரொம்ப நீளுது.. கம்ப்ளைன்ட் குடு்த்தமா போனமானு இல்லாம...
சினி: முனுமுனுப்பு ஆமா இந்த சென்னையே இப்டித்தான் படிச்சி படிச்சி சொன்னேன் பெங்களூரு போய்டலாம்னு கேட்டாலா இவ
ஏட்டு:என்னம்மா நானும் பாத்துட்டு இருக்கேன்... சென்னைனும் கூவம் குப்பம்னும் ரொம்ப பேசிட்டு இருக்க..
அழுக்கா இருந்தா. உடனே கூவம் தானா... ரௌடிங்கனாலே குப்பம்தானா.. தமிழ்நாட்டுக்கே சோறு போடுற ஊருமா இது..
நெல்லு விளையலனு கேக்காத....கையில காசு இல்லாம சென்னைக்கு வந்தவன்தான் இப்ப தொழிலதிபரா இருக்கான்..
சுண்டல் வித்தவன்லாம் கடை வச்சிட்டு நடத்திட்டுருக்கான்..
இப்போ மெரினாவுல போராட்டம் பண்ணச்சொல ஆருமா வந்துனு சோறு குடுத்தது.. ஆரு காப்பாத்துனா அந்த புள்லிங்கள..
பொத்தம்பொதுவா சொல்லிட்டு போய்டுறீங்கம்மா.... எல்லா ஊர்லயும் இருக்குறவன் மாரி தான இங்கயும் ரௌடியும் திருடனும் இருக்கான் அது என்ன சென்னைய மட்டும் மட்டம்தட்டி பேசுறீங்க..
கம்ளைன்ட் எழுதிக் கொடுத்துக்கொண்டு ஏட்டை முறைத்துவிட்டு வெளியே வந்த சினி, போலிஸ் கமிஷருக்கு போன் செய்தாள்..
சில மணி நேரத்தில்....
போலீஸ் வண்டியை எடுத்துக்கொண்டு அஞ்சலியை கண்டுபிடிப்பதாக வெளியே சென்றது...
அஞ்சலியை அடைத்து வைத்திருக்கும் இடம்.......
அஞ்சலி மெதுவாக கண் விழிக்கிறாள்..
அஞ்சலி: தண்ணி தண்ணி...
ஒரு கை வந்து தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவள் வாயருகே கொண்டு செல்கிறது.. தலையை மெதுவாக வருடிக் கொடுக்கிறது..
அஞ்சலி நிமிர்கிறாள்... முக மலர்ச்சியுடன்..
அஞ்சலி: கதிர் .... எப்டி ஹாஸ்பிட்டல் ல இருந்து வந்த.. ஆர் யு ஓகே நவ்.. டேய்
மெதுவாக முகத்தை நோக்கி செல்கிறது அவளின் பார்வை... வெளிச்ச பின்னணியில் கைகளைத் தடவி முகத்தை திறக்கிறான்.. கையில் கடப்பாறையுடன்
நா கதிர் இல்லடி.. சித்து.... சித்தார்த் டி என் ********
டங்........... இருள்கிறது... கண்ணை மூடி மயங்கிவிழுகிறாள் அஞ்சலி....
காதல்.... காத்திரு........