காதல் கேள்விகுறியா

கனவுகள் எல்லாம்
நிஜமாகாதா???
நிஜமானது எல்லாம்
உயிர்பெறாதா???
உயிர்பெற்றது எல்லாம்
உருகிவழியாதா???
உருகிவழிந்தது எல்லாம்
காத்திருக்காதா???
காத்திருந்தது எல்லாம்
தவம்செய்யாதா???
தவம்செய்தது எல்லாம்
வரம்பெறாதா???
வரம்பெற்றது எல்லாம்
தூதுவிடாதா???
தூதுவிட்டது எல்லாம்
தேடியலையாதா???
தேடியலைந்தது எல்லாம்
ஓய்ந்துபோகாதா???
ஓய்ந்துபோனது எல்லாம்
ஓய்வெடுக்காதா???
ஓய்வெடுத்தது எல்லாம்
உயிலெழுதாதா???
உயிலெழுதியது எல்லாம்
உனக்காகாதா???
உனக்கானது எல்லாம்
என்னை தீண்டாதா???
என்னை தீண்டியது எல்லாம்
கவிதையாகாதா???
கவிதையானது எல்லாம்
காதலாகாதா???
அந்த,
காதலே அலுத்துக்கொண்டு
நம்மை ஒன்று
சேர்க்காதா???
@ஸ்ரீதேவி@